திருமண தகவல் உண்மையா? கீர்த்தி தரப்பு விளக்கம்!!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (15:45 IST)
கீர்த்தி சுரேஷ் திருமண செய்தி குறித்து அவரது தரப்பு விளக்கம் வெளியாகியுள்ளது. 
 
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் சினிமாவில் கீர்த்திக்கு புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. 
 
இதனைத்தொடர்ந்து கதைத்தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாள என 3 மொழிகளிலும் படங்களை வைத்திருக்கும் அவருக்கு திருமணம் என் செய்தி வெளியானது. 
 
ஆம், பாஜக கட்சியுடன் மிகவும் நெருக்கம் உடையவராக கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார், பாஜக கட்சியின் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரை கீர்த்திக்கு திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு கீர்த்தியும் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரவி தலைப்பு செய்தியாக பேசப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது இந்த செய்திக்கு கீர்த்தி சுரேஷ் தரப்பு பதில் அளித்துள்ளது. அதாவது சினிமாவில் இருப்பவர்கள் தனிப்பட்ட விஷயங்கள் மீதான வதந்திகள் எதர்த்தமான ஒன்று தான், என திருமண செய்தி வெறும் வதந்தி என மறுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்