சென்னையில் வீடு வாங்கிய நடிகை

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (12:06 IST)
ரஜினி ஜோடியாக ‘2.0’ படத்தில் நடித்துள்ள எமி ஜாக்சன், சென்னையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
 
 
இங்கிலாந்தில் பிறந்து, ‘மதராசப்பட்டினர்ம்’ மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து,  ஏராளமான தமிழ்ப் படங்களிலும், ஒருசில ஹிந்தி மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். 
 
அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகியிருக்கும் எமி, சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்க முடிவெடுத்துள்ளார். இதனால், பெசண்ட் நகரில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த வீட்டின் அலங்கார  வேலைகள் அனைத்தையும் எமியே முன் நின்று செய்கிறார். இந்த வீட்டில் தன்னுடைய அம்மா மற்றும் வளர்ப்பு நாயுடன்  குடியேறப் போகிறார் எமி.
அடுத்த கட்டுரையில்