ஜெய்- அஞ்சலி காதலுக்கு நடுவே ஜனனி ஐயர்!!

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (11:46 IST)
ஐந்து வருடங்களுக்கு பிறகு நடிகர் ஜெய் மற்ரும் நடிகை அஞ்சலி இணைந்து நடித்துவரும் படம் பலூன். 


 
 
இப்படத்தை புதுமுக இயக்குநர் சினிஷ் என்பவர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜனனி ஐயர் நடித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
கதைப்படி, ஜனனி ஐயர், ஜெய்யை காதலிப்பதுபோல் படத்தில் வருவாராம். இவருடைய கதாபாத்திரத்திலிருந்து படத்தின் கதை நகரும் என்றும் கூறப்படுகிறது. இவர் வரும் காட்சிகள் அனைத்தும் பிளாஸ்பேக்கில் வருவதுபோன்று உருவாகயிருக்கிறதாம்.
 
ஜனனி ஐயர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மாயாஜால் திரையரங்கில் படமாக்கி முடித்துள்ளனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஏப்ரல் முதல் வாரத்தில் கொடைக்கானலில் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்