நீண்ட இடைவெளிக்குப் பின் பாவனா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:29 IST)
தொகுப்பாளினியும் கிரிக்கெட் வர்ணனையாளருமான பாவனா நீண்ட நாட்களுக்கு பிறகு சமூகவலைதளத்தில் அட்டண்டன்ஸ் போட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பாவனா. இவர் துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளுக்கான கிரிக்கெட் வர்ணனையும் செய்து வந்தார். இதற்காக துபாய் சென்ற அவர் பயோ பபிளில் இருந்தார். இப்போது எதிர்பாராதவிதமாக அவரது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் ஐபிஎல் வர்ணனைக் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்து நாடு திரும்பினார்.

அதன் பிறகு எந்தவொரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவரை ரசிகர்கள் மறந்தே போய்விட்டனர். இந்நிலையில் இப்போது பாவனா தனது புதிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் அவர் எதிர்பார்த்தபடியே ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளையும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்