நடிகை கங்கனா ரனாவத் தனது நிர்வாண புகைப்படத்தை தனது மின்னஞ்சலுக்கு அனுப்பவில்லை என பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தனக்கும் ரித்திக் ரோஷனுக்கும் இடையே காதல் இருந்ததாகவும், அதை அவர் ரகசியமாகவே நீடிக்க விரும்பியதால் அவரை விட்டு விலகி விட்டதாகவும் சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார். மேலும், தனது நிர்வாண புகைப்படங்களை காதலன் ரித்திக் ரோஷனுக்கு அனுப்பியதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரித்திக் ரோஷன் “ நான் கங்கனாவுடன் படங்களில் நடித்திருக்கிறேன். தனியா எந்த இடத்திலும் அவரை சந்தித்ததில்லை. அவரின் புகார்களை கண்டு கொள்ளாமல் விட்டது என் தவறு. அவர் அனுப்பியதாக கூறும் இமெயில்கள் எனக்கு வரவேயில்லை.
என்னுடைய பெயரில் யாரோ உருவாக்கிய போலியான மின்னஞ்சலுக்கு அவர் தனது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியிருக்கிறார். எனது செல்போன் மற்றும் லேப்டாப்பை சைபர் செல்லிடம் கொடுத்து விட்டேன். அவர் ஏன் அப்படி செய்யவில்லை?
உண்மையை தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.