மெர்சல் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். அஸ்வின்

வியாழன், 5 அக்டோபர் 2017 (23:24 IST)
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களில் பல சாதனைகளை முறியடித்தது. 25 மில்லியன் பார்வையாளர்கள், 10 லட்சத்தை நெருங்கும் லைக்குகள் என சாதனைகள் குவிந்து கொண்டே இருக்கின்றது



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை சமீபத்தில் பார்த்து தான் வியந்ததாகவும், இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை விஜய் ரசிகர்களுடன் இணைந்து பார்க்க விருப்பபடுவதாகவும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
மெர்சல் படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி விஐபிக்களுக்கும் மெர்சல் ஜூரம் பற்றி கொண்டது என்பது அஸ்வினின் டுவிட்டில் இருந்து தெரியவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்