விரைவில் நடிகர் சங்க தேர்தல் : மீண்டும் ராதாரவி - விஷால் அணி மோதல்?

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (15:54 IST)
தற்போதுள்ள தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம், வருகிற மே மாதம் முடிவடைவதால் நடிகர் சங்க தேர்தல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 
கடந்த 2015ம் ஆண்டு, நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த சரத்குமார் மற்றும் ராதாரவி அணிக்கு எதிராக களம் இறங்கிய விஷால், கார்த்திக், நாசர் உள்ளிட்ட அணி தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்றனர்.
 
மேலும், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதே தங்கள் லட்சியம் எனக் கூறி வந்தனர்.  கூறியது போல், சென்னை தி. நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் நடிகர சங்க கட்டிடத்தை கட்டி வருகின்றனர். சமீபத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து சினிமா நட்சத்திரங்களையும் மலேசியா அழைத்து சென்று நட்சத்திர கலை விழாவையும் அவர்கள் நடத்தினர். அதில், ரூ.10 கோடி நிதி கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. அதோடு, நடிகர் சங்க கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே என்பதால் வருகிற மே மாதம் மீண்டும் தேர்தலை நடத்த வேலைகள் நடந்து வருகின்றன.
 
சங்க பணத்தில் ஊழல் செய்ததாக கூறி சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை விஷால் அணி சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, அவர்கள் போட்டியிட முடியாது என விஷால் தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று இந்த தேர்தலில் மீண்டும் ராதாரவி அணியினர் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
சஙக கட்டிட பணிகள் முடியாததால், எங்கள் அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடும் என ஏற்கனவே விஷால் கூறிவிட்டார். எனவே, விஷால் - ராதாரவி மோதல் மீண்டும் மே மாத தேர்தலில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்