தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகின்றது. இன்று முதல் பேருந்து கட்டணங்கள் சிறிய அளவில் குறைக்கப்பட்டிருந்தாலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.