தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடிக்குழு, பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, இடம் பொருள் ஏவல், இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்துடன் இணைந்து ‘லால் சலாம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில், மத்திய பாஜக அரசு, இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ''இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என்றும் பாரதம் என்பதுதான் நமது கலாச்சார பெயர்'' என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தன் 'எக்ஸ்' என்ற டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு ரீடிவீட் பதிவிட்ட நடிகர் விஷ்ணு விஷால், ‘’நாட்டின் பெயரை மாற்றுவது எப்படி நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும்’’? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ''நம் நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும் அறியப்பட்ட நிலையில், இப்போது திடீரென இந்தியா என்ற பெயரை ஏன் துறக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.