மெகா வைரலாகும் நடிகர் விக்ரமின் நியூ லுக் வீடியோ - நீங்களே பாருங்கள்..!

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (15:22 IST)
இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருக்கும் விக்ரம் அங்கிருந்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் விக்ரமின் புதிய லுக்கை பார்த்த விக்ரம் ரசிகர்கள் விக்ரமின் அழகை வர்ணித்து  கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/RajeshMSelva/status/1059998064188899329?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1060002532989198338&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F161687

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்