நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து விஜய்சேதுபதி கூறியது என்ன?

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (06:38 IST)
நடிகைகள் உள்பட பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வகையான ஆண்களின் மனநிலையை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது “ என நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்



 


கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகில் பட வாய்ப்புகளுக்காக நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட், படப்பிடிப்பின்போது பாலியல் சீண்டல் ஆகியவை குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும்போது இதுகுறித்து விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியபோது, 'பாலியல் தொல்லை குறித்தும், அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்தும் பேசியுள்ள நடிகைகள் அவர்களின் சொந்த கருத்துகளை தெரிவித்துள்ளனர். பெண்கள் எல்லா இடங்களிலும் பாலியல் தொல்லைகளை எதிர்கொள்கிறார்கள். சிறுமிகளைக் கூட இவர்கள் விட்டுவைப்பதில்லை.

பெண்கள்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையானவர்கள். நம்முடைய அம்மா போன்ற ஒரு பெண் இல்லை என்றால் நாம் பிறந்திருக்கவே முடியாது. இதெல்லாம் அவர்கள் உணர்வுப் பூர்வமாக புரிந்து கொண்டு, பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். எதையும் அழுத்தம் கொடுத்த செய்ய வைக்க முடியாது. பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் எண்ணத்துடன் இருக்கும் ஆண்களை பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது.” என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்