நடிகர் சுஷாந்த் மரண வழக்கு; இரு முன்னணி நடிகைகளுக்கு விரைவில் நோட்டீஸ் !

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:54 IST)
சமீபத்தில் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அவரது காதலி ரியா போதை வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு பல புதிய திருப்பதைக் கண்டுள்ளது.

இதனால் பலரும் இதில் சிக்க வாய்ப்புள்ளது என செய்திகள் வெளியானது. அந்த வகையில் நடிகர் சுஷாந்த் மரண வழக்கில்  ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானுக்கு போதைப் பொருள் போலீஸார் விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இவ்வழக்கில் சிபிஐயுடன், அமலாப்பிரிவினர்,  போதை தடுப்பு போலிஸாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதில் மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்