கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நான்காம் சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கானப் பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன.