நடிகர் சூரிக்கு சலியூட் அடிக்கும் ரசிகர்கள் - அவரது குழந்தைகளுக்கு குவியும் பாராட்டு!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (13:00 IST)
தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி கடந்த சில தினங்களாகவே தன் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு சமைப்பது, குளிப்பாட்டுவது , பாடம் படிப்பது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டிருந்தார். தற்போது அவரது குழந்தைகளுடன் சேர்ந்து கொரோனா குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளை கூறுகிறார். நாளுக்கு நாள் சூரின் வீடியோக்களுக்கு லைக்ஸ் குவிவதோடு பலரும் பிராட்டி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#covid19 #corona #socialdistancing #indiafightscorona #stayathome

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்