கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். எனவே ஷூட்டிங் பல ரத்தானது. இதனால் அனைத்து சேனல்களும் தங்களது பழைய சீரியலை, கைவசம் உள்ள படங்களை ஒளிபரப்ப துவங்கியுள்ளன.
அந்த வகையில் அரசு சேனலான தூர்தர்ஷன் முதலில் ராமாயணத்தை ஒளிபரப்புவதாக அறிவித்தது. அதன் பின்னர் மக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது ராமாயணம், மகாபாரத்தின் வரிசையில் உபநிஷத் கங்கா, சாணக்யா, கிருஷ்ணா காளி, சர்க்கஸ், சக்திமான் ஆகிய தொடர்களை ஒளிபரப்ப உள்ளது.
இதனால் வெகுவாக குஷியாகியுள்ள 90s கிட்ஸ் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Shaktimaan என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்குவதோடு, தூர்தர்ஷன் இருக்க இனி நெட்ஃபிலிக் மற்றும் அமேசான் ப்ரைம் எங்களுக்கு தேவை படாது என தெரிவித்து வருகின்றனர்.