எனக்கும் இதே மாதிரி நடந்துச்சு... யாஷிகாவுக்கு ஆறுதல் கூறிய ஸ்ரீகாந்த்!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (12:01 IST)
நடிகை யாஷிகா கார் ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதையடுத்து அவரது தோழி சம்பவ இடத்திலேயே மரணித்தார். இதனால் யாஷிகாவின் ஒட்டு உரிமம் பறிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் குடிபோதையில் கார் ஒட்டியதாக கூறி மக்கள் விமர்சித்தனர் 

இதனால் யாஷிகா அவப்பெயரை சம்பாதித்துள்ளார். இந்நிலையில் யாஷிகாவுக்கு ஆறுதல் கூறியுள்ள பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், "அன்புள்ள யாஷிகா நீங்கள் மிகவும் உறுதியாகவும் பாசிடிவாகவும் இருக்க வேண்டிய நேரம் இது. கண்டிப்பாக நீங்கள் பழைய நிலைக்கே திரும்பி வருவீர்கள். நானும் இதுபோன்ற நிலையை எதிர்கொண்டு இருக்கிறேன். அது எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். விரைவில் நீங்கள் குணமடைந்து நல்ல உடல் நிலையை பெறுவீர்கள் என்று வாழ்த்துகிறேன்’ என்று கூற யாஷிகா ஸ்ரீகாந்துக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்