கொரோனாவால் படப்பிடிப்புகள் நிறுத்தம் – தொழிலாளர்களுக்கு சிவக்குமார் உதவி !

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (14:57 IST)
கொரோனா வைரஸ் பீதியால் தமிழ் சினிமாவில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் உதவியாக அளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 350 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 19 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

எப்போது படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் சினிமாவில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சிவக்குமார் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாயை தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு அளித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்