நடிகர் ஷர்வானந்த் 30வது படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (19:56 IST)
நடிகர் ஷர்வானந்த் 30வது படத்தின் டைட்டில் அறிவிப்பு!
பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் நடிக்கவிருக்கும் 30வது திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது 
 
தமிழில் காதல்னா சும்மா இல்லை, நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவரும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஷர்வானந்த் 
 
இவரது 30வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சற்று முன் வந்துள்ளது. இந்த படத்திற்கு ’ஓகே ஓகே ஜீவிதம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை ஸ்ரீ கார்த்திக் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் எஸ்ஆர் பிரபு இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்