’குக் வித் கோமாளி’ அஸ்வின் பட டைட்டில் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (19:26 IST)
’குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தைப் பெற்றவர் அஸ்வின் என்பதும் இவர் மக்கள் மனதில் முதல் இடத்தைப் பெற்றவர் என்பதும் தெரிந்ததே. மேலும் இவர் நிச்சயமாக ஹீரோ ஆவார் என்றும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயன் முதல் ஏஆர் ரஹ்மான் வரை கூறியிருந்தனர். அவர்களின் வாக்கு தற்போது பலித்துவிட்டது 
 
குக் வித் கோமாளி அஸ்வின் நடித்த முதல் படத்தின் டைட்டில் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ’என்ன சொல்ல போகிறாய்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரவீந்திரன் என்பவர் தயாரிக்க உள்ளார் என்பதும்,  ஹரிஹரன் என்பவர் இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்த படத்தில் அஸ்வினுடன் புகழ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவர்களது பெயர்களும் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. திரையுலகில் ஹீரோவாக வர வேண்டும் என்ற அஸ்வினின் நீண்ட நாள் கனவு இப்போது நிறைவேறியதை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்