’SBI ஏடிஎம்'களில் பணம் எடுக்கக் கட்டணம் அதிகரிப்பு !

வெள்ளி, 25 ஜூன் 2021 (18:30 IST)
வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில்  இதுகுறித்த கட்டண அறிவிப்பை எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

சமீபத்தில் , ஏடிஎம் களில் வாடிக்கையாளர்கள் கூடுதலாகப் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இலவசப் பரிவர்த்தனைகளுக்கு மேல் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் போது வசூலிக்க வேண்டிய தொகை ரூ.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் ஏடிம்களில் 5 முறை இலவசமாகப் பணம் எடுக்கலாம் இதற்கு மேல் ஒவ்வொருமுறையும் பணம் எடுக்கும்போது ரூ20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வரும் 2022 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் 5 முறை இலவசமாக பணம் எடுக்கும் முறைக்குப் பின் ஒவ்வொருமுறை பணம் எடுக்கும்போது ரூ.21 வசூலிக்கப்படும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது  நாட்டில் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ..15 +ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படு என அறிவித்துள்ளது.

மேலும், ஒரு மாதத்தில் ஏடிஎம் அல்லது  இதர வங்கியில் நான்கு முறைக்குமேல் பணம் எடுத்தால் ரூ.15 + ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.இது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்ற அறிவிப்பு மற்ற முன்னணி வங்கிகளும் அறிவிக்குமொ என கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்