டாக்டர் ராம்தாஸ் உடன் நடிகர் சந்தானம் சந்திப்பு: வைரல் புகைப்படங்கள்!
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்து வரும் படம் நல்ல வெற்றியைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது, சமீபத்தில் சந்தானம் நடித்த டிக்கிலோனா திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நடிகர் சந்தானம், டாக்டர் ராமதாஸ் அவர்களை சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் திருமணத்தில் சந்தானம் கலந்து கொண்டார். அப்போது அவர் டாக்டர் ராமதாஸ் அவர்களை சந்தித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்
நீண்ட இடைவெளிக்கு பின்னர் அய்யா அவர்களை சந்திக்கிறேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்று குறிப்பிடப்பட்டது. இதே திருமணத்திற்கு நடிகர் வடிவேலு கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது