தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டா மாடல் அழகி: காரணம் இதுதான்!

புதன், 8 செப்டம்பர் 2021 (15:28 IST)
தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டா மாடல் அழகி: காரணம் இதுதான்!
மாடல் அழகி ஒருவர் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு வருகை தந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்த வினோத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது
 
பிரேசில் நாட்டை சேர்ந்த கிரிஸ் கலேரா என்ற மாடல் அழகி பல ஆண்களை காதலித்தார். ஆனால் ஒருவரை கூட அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும் காதலிக்கும்போதே கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பல பிரேக் அப்-களூக்கு பின்னர் திருமணத்தையே வெறுத்த மாடல் அழகி இனிமேல் யாருடனும் திருமணம் இல்லை என்று முடிவெடுத்தார். இந்த முடிவை அடுத்து அவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார் 
 
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவர் பிரேசில் நாட்டில் உள்ள சர்ச் ஒன்றில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். பல பிரேக்கப்புகளுக்கு பிறகு இந்த முடிவை எடுத்ததாகவும் தனியாக வாழ கூடியம் மனதைரியம் தனக்கு உள்ளது என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த திருமணத்தை செய்ததாகவும் கிரிஸ் கலேரா தெரிவித்துள்ளார்
 
மாடல் அழகி ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்