இயக்குனர் வெற்றிமாறனோடு கைகோர்க்கும் கவின்…!

vinoth
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (07:35 IST)
சிவகார்த்திகேயன் பாணியில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து ஆரம்பநிலை வெற்றியை பெற்றுள்ளார் கவின். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்டார் படத்தை டாடா கவின் நடிப்பில் உருவாக்கி வருகிறார் இயக்குனர் இளன்.

அதில் ஸ்டார், கிஸ் மற்றும் இன்னும் பெயரிடப்படாத ஒரு படம் ஆகியவை அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளன. இதையடுத்து கவின் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் என்பவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான ஆரம்ப கட்ட வேலைகள் இப்போது நடந்து வருவதாக தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்