இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, மக்களை மட்டுமே நம்பி உள்ளதாகவும், ஆனால் கூட்டணியை நம்பிதான் திமுக உள்ளதாகவும், மக்களை நம்பி இல்லை என்றும் விமர்சித்தார்.
அதிமுக ஆட்சியில் தான் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், தற்போதைய ஆட்சியில் தமிழக மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்றும் மக்களைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார். பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.