நடிகையைக் கடத்திய வழக்கு… சாட்சிகளைக் கலைக்க காசை வாரியிறைத்த நடிகர்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (17:18 IST)
நடிகை ஒருவரை கடத்தில் பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் கைதான திலிப் சாட்சிகளைக் காசு கொடுத்து கலைக்க முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முன்னணி மலையாள மற்றும் தமிழ் நடிகையான அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர், படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாவனாவிடம் ஏற்கனவே கார் ஒட்டுனராக பணிபுரிந்த பல்சர் சுனில் இதில் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. எனவே, அவரோடு மற்றும் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும், இந்த வழக்கில், நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியானது. ஆனால், அவர் அதை மறுத்தார். ஆனால் அவரை கைது செய்த போலிஸார் 85 நாட்களுக்குப் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர். இப்போது இந்த வழக்கு முக்கியமானக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் நடிகர் திலிப் அவருக்கு எதிரான சாட்சிகளைக் காசு கொடுத்து கலைத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திலிப்புக்கு வழக்கில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்