தமிழ் சினிமாவின் மைல்கல் 16 வயதினிலே – 43 ஆண்டுகள் நிறைவு!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (17:12 IST)
தமிழ் சினிமாவின் மைல்கல் சினிமாக்களில் ஒன்றான 16 வயதினிலே 43 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்துள்ளது.

பாரதிராஜா இயக்கத்தில் கமல் ரஜினி ஸ்ரீதேவி ஆகிய மூவரும் நடித்து தமிழ் சினிமா உலகையே புரட்டிப்போட்ட திரைப்படங்களில் ஒன்று 16 வயதினிலே. அதுவரை தமிழ் சினிமாவில் கிராமம் என்றால் ஸ்டூடியோக்களில் போடப்பட்ட அரங்கமாகவே இருந்த நிலையில் அதைமாற்றி ரத்தமும் சதையுமாக கிராமத்தையும் கிராமத்து மனிதர்களையும் காட்டிய திரைப்படம்.

அந்த படத்தில் பணிபுரிந்தவர்களான இளையராஜா, ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பாரதிராஜா ஆகிய ஐவரும் தங்கள் துறையில் வித்தகர்களாக கோலோச்சி கலைசேவை செய்தனர். அந்த படம் ரிலீஸாகி இன்றோடு 43 ஆண்டுகள் ஆகியுள்ளன. 16 வயதினிலேயே படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு அந்த படத்தை டிஜிட்டலைஸ் செய்து மீண்டும் ரிலீஸ் செய்யும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்