பேஸ்புக், வாட்ஸப் போன்றவற்றால் பல்வேறு சமூக பிரச்சினைகள் எழுவதாக பலர் குற்றம் கூறி வந்தாலும், சில சமயங்களில் சமூக வலைதளங்கள் உதவியாகவும் இருந்து வருகின்றன. திருப்பூரை சேர்ந்த காஜா மைதீன் என்பவரின் மகன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்த காஜா மைதீன் தனது மகன் புகைப்படம் மற்றும் தனது தொலைபேசி எண்ணை வாட்ஸப்பில் பகிர்ந்து விஷயத்தை கூறியுள்ளார். அதை தொடர்ந்து காஜா மைதீனின் மகன் காணாமல் போன விவகாரம் வேக வேகமாக வாட்ஸப் மூலமாக திருப்பூர் பகுதி முழுவதும் பரவியுள்ளது. மேலும் திருப்பூர் முழுவதும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்த தொடங்கியுள்ளனர்.