ராமனாக நடிக்கும் அல்லு அர்ஜுன்?

Webdunia
வியாழன், 11 மே 2017 (15:53 IST)
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில், ராமனாக அல்லு அர்ஜுன் நடிக்கலாம் எனத் தகவல்  வெளியாகியுள்ளது.

 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’, சரித்திரப் படங்களின் மீதான காதலை அதிகரித்திருக்கிறது. ‘பாகுபலி’ இரண்டு பாகங்களின் வசூல், நிறைய சரித்திரக் கதைகளை இயக்கும் ஆசையை எல்லோருக்கும் உண்டாக்கி  இருக்கிறது. ‘பாகுபலி’ முதல் பாகத்தின் வெற்றியைப் பார்த்து, 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘சங்கமித்ரா’ படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கினார் சுந்தர்.சி. இந்தப் படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
 
1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில், மோகன்லால் நடிக்கும் ‘மகாபாரதம்’ படமும் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில், தமிழ்,  மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளைச் சேர்ந்த நடிகர்களும் நடிக்க இருக்கின்றனர்.
 
இந்நிலையில், ‘ராமாயணம்’ படத்தை 500 ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார், பிரபல தெலுங்கு  தயாரிப்பாளர் அல்லு அரவிந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை, மூன்று பாகங்களாக எடுக்கப் போகின்றனர். இந்த வருட இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தில், அல்லு அரவிந்தின் மகனான  அல்லு அர்ஜுன் ராமனாக நடிக்கலாம் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்