பிக்பாஸ் வீட்டுக்குள் பிரபல சினிமா விமர்சகர்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (15:58 IST)
பிரபல சினிமா விமர்சகரான அபிஷேக் ராஜா இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். நான்கு சீசன்கள் கடந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த முறை வீட்டுக்கு செல்லும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் பிரபலமாக இருக்கும் சினிமா விமர்சகரும் தொகுப்பாளருமான அபிஷேக் ராஜா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்