பிரபல சினிமா விமர்சகர் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்!

vinoth
புதன், 10 ஜனவரி 2024 (07:28 IST)
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர் ஜி வி பிரகாஷ். அவர் இசையமைப்பில் விரைவில் அவரின் 100 ஆவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகராகவும் 25 படங்கள் என்ற மைல்கல்லை கிங்ஸ்டன் படம் மூலமாக எட்டியுள்ளார். அவர் நடிப்பில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

தற்போது பல படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது ஜி வி பிரகாஷ் அடுத்து பிரபல சினிமா விமர்சகரான அபிஷேக் ராஜா இயக்கத்தில் “STARDA” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்