மாநாடு’ படத்தில் சிம்பு கேரக்டர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (22:11 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் கோவையில் தொடங்க உள்ளது. ஒரு மாதம் தொடர்ச்சியாக கோவையில் படப்பிடிப்பை முடித்த உடன் படக்குழுவினர் சென்னை திரும்பி ஒரு சில நாட்கள் மட்டுமே ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின்னர் இலங்கை செல்ல உள்ளனர். இலங்கையில் ஒன்றரை மாதம் இடைவிடாத படப்பிடிப்பு நடத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
 
இந்த நிலையில் சிம்பு இந்த படத்தில் ஒரு முஸ்லிம் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. தற்போது ’அப்துல் காலிக்’ என்ற முஸ்லீம் கேரக்டரில் சிம்பு நடிக்க உள்ளதாக இயக்குனர் வெங்கட்பிரபு அறிவித்துள்ளார்
 
இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த டுவிட்டரில் ‘காளியோட ஆட்டத்தை பாக்கத்தானே போறீங்க’ என்று ட்விட் செய்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் கதை குறித்து கல்யாணி பிரியதர்ஷன் மிகப்பெரிய அளவில் பாராட்டி கூறிய நிலையில் இந்த படம் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்