இந்த நிலையில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் மஹா என்ற படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் இந்த கதையை கேள்விப்பட்டு அதில் தன்னுடைய கேரக்டர் கேட்டு இம்ப்ரஸ் ஆன சிம்பு இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரை கொஞ்சம் விரிவாக்கம் செய்யும்படியும் தான் அதற்கு முழு ஒத்துழைப்பு தர தயார் என்று கூறியதாகவும் தெரிகிறது.
உடனே படக்குழுவினர் உற்சாகமடைந்து சிம்பு கிட்டத்தட்ட படம் முழுவதும் வரும்படி திரைக்கதையை மாற்றி அமைக்கப்பட்டதாகவும், எனவே இந்த படம் விளம்பரப்படுத்தும் போது சிம்பு படம் என்று விளம்பரப்படுத்தப்பட உள்ளதாகவும் நீண்ட இடைவெளிக்குப் பின் சிம்பு ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு ஆக்ஷன் விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே மாநாடு நடப்பதற்கு முன்னதாகவே சிம்பு நடித்த ஒரு அட்டகாசமான திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது