விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
அதையடுத்து யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. இந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் ஆல்யா மகளுடன் கணவர் சஞ்சீவ் காலீல் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி காசு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.