நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்த நட்சத்திர ஜோடிகள்!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (18:47 IST)
ஆதி மற்றும் நிக்கி கல்ராணிக்கு நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்த நிலையில் இப்போது அதனை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். இதனால் இந்த ஜோடி கவனத்தை ஈர்த்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இருவரும் காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இருவரும் இந்த செய்திகளை மறுக்கவும் இல்லை. இதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவர்கள் இருவருக்கும் ரகசியமாக சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து நிச்சயதார்த்த புகைப்படத்தை இப்போது இருவருமே பகிர்ந்து அதை உறுதி செய்துள்ளனர். இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்