வீடியோவை வெளியிட்டதற்காக அமலா பாலிடம் மன்னிப்பு கேட்ட "ஆடை" இயக்குனர்!

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (12:40 IST)
மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. 


 
அதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. 
 
ஆடையின்றி வெறும் டாய்லெட் பேப்பர்களை உடலில் ஊற்றிக்கொண்டு அமலா பால் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் மாற்றிய மீம்ஸ்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. 
 
அந்தவகையில் ஆடை  டீசரின்  வடிவேலு வெர்ஷனை மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிக லக்ஸ்களை குவித்து ஷேர் செய்யப்பட்டுவந்தது இதனை பார்த்த இப்படத்தின் இயக்குனர் ரத்னகுமார் அந்த வீடியோ ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். 


 
அதில் அவர் கூறியுள்ளதாவது, இப்போதெல்லாம் ஒவ்வொரு திரைப்படத்திற்கும்  வடிவேலு வெர்ஷன் வந்துவிடுகிறது. அந்தவகையில் ஆடை படமும் விதிவிலக்கல்ல. வடிவேலு வெர்ஷனின் இந்த ஆடை வீடியோ மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இந்த வீடியோவை ஷேர் செய்யவதில் என்னை நானே கட்டுப்படுத்த முடியவில்லை. ஆடை படம் சுதந்திரத்தை பற்றி பேச உள்ளது. நான் பேச்சுரிமையை மதிக்கிறேன் என்று கூறி என்னை  மன்னிக்கவும் அமலாபால் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்