ஏன் ஆடுஜீவிதம் படம் கிராமி விருதுக்குத் தேர்வாகவில்லை… ஏ ஆர் ரஹ்மான் சொன்ன காரணம்!

vinoth

வியாழன், 10 அக்டோபர் 2024 (07:15 IST)
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் சிறப்பான இசையைக் கொடுத்திருந்தார். பலராலும் பாடல்களும் பின்னணி இசையும் பாராட்டப்பட்டது.

ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எந்த விருதுகளும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் தேசிய விருதுகளின் அறிவிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்த படத்தின் இசைத்தொகுப்பை கிராமி விருதுக்கு அனுப்பியிருந்தார் ரஹ்மான். அங்கும் அது தேர்வாகவில்லை.

அதற்கானக் காரணம் குறித்து தற்போது ரஹ்மான் பேசியுள்ளார். அதில் “கிராமி விருதுகள் குழுவின் நிபந்தனைகளில் ஒன்று விருதுக்கு அனுப்பப்படும் இசையின் கால அளவு 15 நிமிடங்கள் இருக்கவேண்டும். ஆனால் ஆடுஜீவிதம் இசையின் கால அளவு 14 நிமிடங்கள்தான். அதனால் கிராமி குழு ஆடு ஜீவிதம் இசையை நிராகரித்துவிட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்