ஏ ஆர் ஆர் ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் என்ற பெயரில் மெய்நிகர் தயாரிப்புக் கூடம் துவக்க விழாவில் ஏ ஆர் ரஹ்மான், மணிரத்னம் பங்கேற்பு!

J.Durai

செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (12:31 IST)
சென்னையில் உள்ள ஏ ஆர் ஆர்  ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம்  இந்தியா மற்றும் உலகெங்கும் இருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில்  தொடங்கப்பட்டது.
 
தொடக்க விழாவில் தொழில்துறை தலைவர்களின் கருத்தாழம் மிக்க உரைகள் இடம்பெற்றன. 
 
சிஜி ப்ரோவைச் சேர்ந்த எட்வர்ட் டாசன் டெய்லர் பகிர்ந்தவை......
 
மெய்நிகர் தயாரிப்பில் தனது நிபுணத்துவத்தையும்எதிர்காலத் திரைப்படத் தயாரிப்பை மாற்றி அமைக்கும் தொழில்நுட்ப திறனையும் 
Dimension5 ஐச் சேர்ந்த இயன் மெசினா திரைப்படத் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவின் அற்புதமான பயன்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
 
இதனை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம்.....
 
UStream-ன் புதுமையான திறன்கள் மீதான தனது ஆர்வத்தை பற்றி எடுத்துரைத்தார்.
 
ஏ.ஆர்.ரஹ்மான் தனது  உரையில் கூறியது......
 
கலை மற்றும் தொழில்நுட்பம் உயர் மட்டத்தில் சங்கமிக்கும் இடமாக UStream அமைந்துள்ளது. UStream மூலம் இந்தியக் கதைசொல்லலை உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு செல்ல முடியும். தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு தொழில்நுட்பத்தை மட்டுமில்லாமல், புதிய வாய்ப்புகளையும் அளிப்பதும் இதன் நோக்கம் ஆகும் என்றார். 
 
ஸ்ரீதர் சந்தானம் பேசுகையில்......
 
UStream என்பது வெறும் ஸ்டுடியோ அல்ல; இது இந்தியத் திரைப்படத் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும் புதுமைக்கான மையம். சென்னையில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களை சர்வதேசத் தரத்தை அடையச் செய்வதே எங்கள் குறிக்கோள் என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்