முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
திங்கள், 15 ஜனவரி 2018 (23:48 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு அனிருத் மற்றும் டி.இமான் ஆகிய இருவரும் மாறி மாறி இசையமைத்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்முதலாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 5வது படத்தில் நடிக்கவிருக்கும் சிவகார்த்திகேயன், இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தை 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கவுள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறிய சிவகார்த்திகேயன், 'தனது வாழ்நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும் அந்த நேரத்திற்காக காத்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்