கே ஜி எப் ஹீரோவுக்கு வலைவிரித்த தமிழ் முன்னணி இயக்குனர்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (09:01 IST)
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கேஜிஎப் கதாநாயகன் யாஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த அவர் இப்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் கேஜிஎப் நடிகர் யாஷை வைத்து ஒரு படத்தை இயக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்