இந்நிலையில் அந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பல முன்னணி நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் ரிலீஸாகவே விரும்புவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது தமிழில் பெரிய அளவில் கால்பதிக்கவேண்டும் என நினைக்கும் சோனி லைவ் நிறுவனம் இப்போது அந்த படத்தை தங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போதைய நிலமையைக் கணக்கில் கொண்டு தயாரிப்பாளரும் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதாக தெரிகிறது.