முதல்வர் ஸ்டாலினின் பயோபிக்கை படமாக எடுக்கலாம்… இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கருத்து!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (09:06 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ’எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற கண்காட்சியை ஏற்பாடு செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். இதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திரைப்பட இயக்குனர் முருகதாஸ் நேற்று பார்வையிட்டு பத்திரிக்கையாளர் முன் பேசினார். அப்போது “தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கி வைத்துள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின். நாம் ஏற்கனவே அறிந்திருந்த விஷயங்களை கண்காட்சியில் பார்க்கும் போது அவரோடு பயணித்த உணர்வை அளிக்கிறது.சிறிய வயதிலேயே இளைஞரணிக்குப் பொறுப்பேற்று, தனக்கென ஒரு போராட்டத்தை அமைத்து வெற்றிகொண்டு மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். இந்த பதிவுகளை எல்லாம் பயோபிக்காக எடுக்க முடியும். மிசா காலத்தில் அவர் பட்ட துன்பங்களைப் பார்க்கும்போது ஒரு பயோபிக்குக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளது.” எனக் கூறியுள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்