நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்.. பக்கத்து வீட்டுடன் பார்க்கிங் தகராறு..!

Mahendran
திங்கள், 1 ஏப்ரல் 2024 (10:25 IST)
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து வருபவர் சரண்யா பொன்வண்ணன் என்பதும், இவர் நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சரண்யா பொன்வண்ணனுக்கும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக சண்டை நடந்த நிலையில் இந்த சண்டையின் போது சரண்யா பொன்வண்ணன் பக்கத்து வீட்டுக்காரரை கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது

இது குறித்து ஸ்ரீதேவி என்ற பெண் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் இந்த புகார் கொடுத்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணனிடம் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்