பிரபல நடிகையின் கணவர் மீது பணமோசடி வழக்கு பதிவு

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (19:45 IST)
பிரபல சின்னத்திரை நடிகை மகாலாட்சுமியின் கணவரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் மீது  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் லிப்ரா புரடக்ஷன் என்ற நிறுவனம்  மூலம் சினிமா படங்களைத் தயாரித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவர், பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.  இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான விஜய்  என்பவர் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பணமோசடி புகார் கொடுத்துள்ளார்.

அதில்,’ தன்னிடம் ரூ.15 பணத்தைப் பெற்றுக் கொண்டு தான் கூறியபடி பணத்தைத் தராமல் அவரது செல்போன் எண்ணையும் ரவீந்தர் பிளாக் செய்ததாகக்’ கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, விஜய் ஆன்லைன் மூலமாக அளித்த அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார்  ரவீந்தர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எனவே, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரவீந்தர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்