ஒரு நாள் இரவுக்கு இத்தனை லட்சத்தை கொட்டி கொடுத்த பிரபல நடிகை!

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (13:26 IST)
விஜய் நடித்த தமிழன் படத்தில் ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா . தற்போது இவர் பாலிவுட்டில்  முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் வரும் டிசம்பர் 3 ம் தேதி நடைபெறவுள்ளது.
 
கிறிஸ்துவ முறைப்படி முதலிலும், இந்துமத முறைப்படி இரண்டாவதாகவும் நடைபெறவுள்ளது. மேலும் திருமணம் ஜோத்பூர் உமத் பவன் அரண்மனையில் நடைபெறவுள்ளது. இங்கு 64 ஆடம்பர அறைகள் இருக்கிறதாம். 
 
இதில் இப்போதைக்கு அவர்கள் 40 அறைகளை புக் செய்துள்ளார்களாம். மொத்தமாக ஒரு நாள் இரவுக்கு வாடகை ரூ 64.40 லட்சமாம். கல்யாண ஜோடிகள் 3 நாளுக்கு ரூ 3.2 கோடி இதற்கு கொடுத்திருக்கிறாம்.
 
மேலும் அங்கு சாப்பாட்டிற்கு ஒரு நபருக்கு மட்டும் ரூ 18 ஆயிரமாம். இன்னும் லைட்டிங்க்ஸ், டெக்கரேஷன் என செலவுகள் இருக்கிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்