நயன்தாரா திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஒரு முக்கிய நிபந்தனை!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (14:25 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் நாளை நடைபெற உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெறும் இந்த திருமணத்திற்கு அரசியல் பிரபலங்கள் திரையுலக பிரபலங்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு செல்போன் அனுமதி கிடையாது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
 
ஆனால் இந்த நிபந்தனை திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களளுக்கு கிடையாது என்றும் மற்றவர்களுக்கு மட்டுமே என்றும் கூறப்படுகிறது .
 
இந்த திருமணத்தின் வீடியோவை மிகப்பெரிய தொகைக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்டிற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதால் இந்த திருமணத்தை யாரும் செல்போனில் வீடியோ எடுத்து விடக்கூடாது என்பதற்காக இந்த நிபந்தனை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்