'96 படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்யப்பட கூடாது'- சமந்தா

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (19:49 IST)
விஜய் சேதுபதி, த்ரிஷா முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள 96 படத்தை நடிகை சமந்தா சமீபத்தில் பார்த்துள்ளார். 96 படத்தை வெகுவாக பாராட்டிய சமந்தா தனது டுவிட்டரில் த்ரிஷாவை பாராட்டித் தள்ளியுள்ளார். அதில் சமந்தா கூறியுள்ளதாவது:
”96 படம் பார்த்தேன்.. கடவுளே என்ன ஒரு நடிப்பு. படத்தில் நீங்கள் எவ்வளவு அற்புதமாக இருந்தீர்கள் என்று எனக்கு சொல்ல வார்த்தைகள் வரவில்லை. நடிப்பில் தனி முத்திரை பதித்திருக்கிறீர்கள். இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் கடினம். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். இந்த வெற்றி தொடரட்டும்.” இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.
 
 
பின்னர் அதில் சமந்தா ரசிகர் ஒருவர் “96 படத்தை ரீமேக் செய்தால் அதில் த்ரிஷா கதாபாத்திரத்தில் தாங்கள் நடிப்பீர்களா? என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
 
அதற்கு பதிலளித்த சமந்தா “96 படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்யப்பட கூடாது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்