எப்போ ஸ்டிரைக் முடியும்? களமிறங்க காத்திருக்கும் 50 படங்கள்

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (16:41 IST)
ஸ்டிரைக் முடிந்ததும் தணிக்கை சான்றிதழ் பெற்ற 50 படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

 
திரைப்பட அதிபர்கள் வேலை நிறுத்தம் நடைப்பெற்று வருகிறது. இதனால் புதிய படங்களை திரைக்கு வராமல் உள்ள்தால் திரையரங்குகளில் பழைய படங்கள்தான் திரையிடப்பட்டு வருகிறது.
 
இதனிடையே படங்கள் அதிகளவில் தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியீடுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் ஸ்டிரைக் முடிவரைந்தவுடன் தணிக்கை சான்றிதம் பெற்ற 50 படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். 
 
விஜய் ஆண்டனியில் காளி, தனிஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா, விஷாலின் இரும்புத்திரை, ரஜினியின் காலா ஆகிய படங்களும் இதில் அடங்கும். 
 
பிப்ரவரி வெளியாக இருந்த சில படங்கள் தேதி தள்ளிவைப்பு காரணத்தில் வெளியாகமல் உள்ளது. இந்நிலையில் தணிக்கை சான்றிதம் பெற்ற முதல் படங்கள் என்ற முன்னுரிமை அடிப்படையில் படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்