டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
புதன், 21 மார்ச் 2018 (22:59 IST)
ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த சூப்பர் ஹிட் தெலுங்கு படம் 'டெம்பர். கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங், சாஹா சலித் அலிகான் நடிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. 'ஸ்பைடர்' படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளராக இருந்த வெங்கட்மோகன் இந்த படத்தை இயக்கவுள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர். வேடத்தில் விஷால் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஷிகண்ணா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லைட் அவுஸ் மூவிமேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு திரைத்துறையினர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தொடங்கும் என கூறப்படுகிறது