ஏப்ரலுக்கு தள்ளி போனது '2.0': அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (09:46 IST)
ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' திரைப்படம் வரும் ஜனவரி 25ல் வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் லைகா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சரியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணி இரவுபகலாக நடந்து வந்த போதிலும் இன்னும் பணி நீண்டுகொண்டே போகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் வில்லன் நடிகர் அக்சயகுமார் நடித்த 'பத்மன்' திரைப்படம் ஜனவரி 25ல் வெளியாகிறது. இதை கணக்கில் கொண்டு ரஜினியின் '2.0' படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

ஏப்ரலில் '2.0 வெளியாகவுள்ளதால் ரஜினிகாந்த் நடித்து வரும் இன்னொரு படமான 'காலா' ஜூலை மாதத்திற்கு தள்ளிபோகும் என தெரிகிறது. இருப்பினும் அடுத்த ஆண்டு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்