சீனாவில் 2.0 வெளியாவதில் சிக்கல் – பின்வாங்கும் தயாரிப்பு நிறுவனம் !

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (09:30 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 2.0 படம் சீனாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ரஜினிகாந்த்  மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் வெளியான '2.0' திரைப்படம் ரூ 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை.

சமீபகாலமாக இந்தியப் படங்கள் சீனாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் 2.0 படத்தையும் சீன மொழியில் டப் செய்து வெளியிட ஹெச்.ஒய். என்ற நிறுவனம் தயாரிப்பு நிறுவனம் விரும்பியது.  இதற்காக சீன மொழியில் படத்த்தை டப் செய்யும் வேலைகள் நடைபெற்றன. படத்தின் பேரையும் பாலிவுட் ரோபோ என மாற்றம் செய்து 37 ஆயிரம் 3D திரையரங்குகளில் வெளியிட இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போத்யு திடீரென அந்த முடிவில் இருந்து தயாரிப்பு நிறுவனம் பின் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால் சமீபத்தில் சீனாவில் ரிலிஸான பேட்மேன் திரைப்படம் படு தோல்வி அடைந்தது. அதுபோல 2.0 வெளியாகும் நேரத்தில் ’தி லயன் கிங்’ எனும் படமும் வெளியாவதால் 2.0 படம் வெற்றிப் பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் 2.0 படத்தை ரிலிஸ் செய்வதை தயாரிப்பு நிறுவனம் மறுபரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்